மாற்றுத்திறனாளி தந்தை, ஏழை தாய் பரிதவிப்பு
மாற்றுத்திறனாளி தந்தை, ஏழை தாய் பரிதவிப்பு / Getting an MBBS seat is useless / the plight of the poor student / pandalur நீலகிரி மாவட்டம் பந்தலுார் அருகே தேவாலா சாமியார் நகர் பகுதியை சேர்ந்தவர்கள் பெருமாள் - கனகா தம்பதி. பெருமாள் சில ஆண்டுகளுக்கு முன் கட்டட வேலை செய்த போது தவறி விழுந்து இடுப்பு எலும்பு உடைந்து நடமாட முடியாத நிலையில் படுக்கையில் உள்ளார். இவர்களின் மூத்த மகள் மிருதுளா, வயது 20. தனியார் பள்ளியில் படித்த இவர் ப்ளஸ் 2 தேர்ச்சி பெற்று நீட் தேர்வில் 427 மதிப்பெண் பெற்று வெற்றி பெற்றார். இவருக்கு மேல்மருவத்துார் தனியார் மெடிக்கல் கல்லுாரியில் எம்.பி.பி.எஸ். சீட் கிடைத்துள்ளது. ஆனால் கல்லுாரி கட்டணம் செலுத்த முடியாமல் தவித்து வருகிறார். ஏழை மாணவி மிருதுளாவின் டாக்டர் கனவு நிறைவேற உதவுவோர் 96559 69861 ல் ஹலோ சொல்லலாம்.