/ மாவட்ட செய்திகள்
/ கோயம்புத்தூர்
/ கோவை அரசு ஆஸ்பத்திரியில் இன்டர்நெட் போதைக்கும் வருது டிரிட்மென்ட்
கோவை அரசு ஆஸ்பத்திரியில் இன்டர்நெட் போதைக்கும் வருது டிரிட்மென்ட்
கோவை அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமைனயில் மது போதையினால் பாதிக்கப்பட்டவர்களை மீட்கும் வார்டு செயல்பட்டு வருகிறது. மது மட்டுமல்லாமல் மற்ற போதை பொருட்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதற்காக தமிழக அரசு கோவை அரசு மருத்துவ கல்லுாரிக்கு ரூ. 12 லட்சம் கூடுதலாக நிதி ஒதுக்கியுள்ளது. மேலும் இணைய தளத்தில் மூழ்கி படிக்க முடியாமல் பாதிக்கப்பட்டுள்ள குழந்தைகளுக்கும் சிகிச்சை அளிக்கும் புதிய மையம் அமைக்கப்பட உள்ளது. இங்கு குழந்தைகளுக்கு தேவையான பிரத்யேக வசதிகள் செய்யப்பட உள்ளன. கோவை அரசு மருத்துவ கல்லுாரியில் அமைய உள்ள சிறப்பு வார்டு குறித்து இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.
நவ 28, 2024