காப்பாற்ற சென்ற தாய்க்கும் கடி | Ohsur | 4 year-old girl child Stray dog bitten
ஓசூர் ஆவலப்பள்ளி பாரத் நகரை சேர்ந்தவர் நாகராஜ், அவரது மனைவி ஜோதி. இவர்களுக்கு 4 வயதுள்ள இரண்டு இரட்டை பெண் குழந்தைகள் உள்ளனர். இதில் மூத்த மகளான தன்யாஸ்ரீ வீட்டின் அருகே விளையாடி கொண்டிருந்தாள். அங்கு சுற்றித்திரிந்த தெருநாய் குழந்தையை துரத்தி துரத்தி கடித்தது. தாய் ஜோதி நாயிடமிருந்து குழந்தையை காப்பாற்ற போராடினார். தெருநாய் அவரையும் கடித்து குதறியது. இருவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து தெருநாயை விரட்டினர். நாய் கடித்ததில் தாய், மகள் இருவரும் பலத்த காயம் அடைந்தனர். இருவரையும் ஓசூர் அரசு ஆஸ்பிடலில் அட்மிட் செய்தனர். சென்னையில் சிறுமியை வளர்ப்பு நாய் கடித்து குதறியது. ஆபத்தான நிலையில் சிறுமியை மீட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. நாய்களால் கடிபடும் துயரம் தினமும் நடக்கிறது. தடுக்க வேண்டிய அரசு மெத்தனமாக இருப்பதசாக குற்றச்சாட்டு எழுந்தது. உயிர்பலி ஏற்படும் முன் உரிய தடுப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தினர்.