தேவிகுளம் போக்சோ விரைவு கோர்ட் உத்தரவு | Girl rape case | each 90 years imprisonment
தேவிகுளம் போக்சோ விரைவு கோர்ட் உத்தரவு | Girl rape case | each 90 years imprisonment for three accused இடுக்கி மாவட்டம் பூப்பாறை அருகே கஜானா பாறை ஏலத் தோட்டத்தில் மேற்கு வங்கத்தை சேர்ந்த தம்பதி வேலை பார்த்தனர். இவர்களது 15 வயது மகள் தனது ஆண் நண்பருடன் கடந்த 2022 மே 29ம் தேதி பூப்பாறைக்கு சென்றார். அங்குள்ள தேயிலைத் தோட்டம் அருகே நண்பருடன் பேசிக்கொண்டு இருந்தார். அங்கு வந்த பூப்பாறையை சேர்ந்த அரவிந்த் வயது 22, சாமுவேல் வயது 19, சிவக்குமார் வயது 19, சுகந்த் வயது 22 மற்றும் இரு சிறுவர்கள் ஆகியோர் ஆண் நண்பரை அடித்து விரட்டினர். சிறுமியை வலுக்கட்டாயமாக தேயிலைத் தோட்டத்திற்கு துாக்கிச் சென்று பாலியல் கூட்டு பலாத்காரம் செய்தனர். இதில் ஆறு பேரையும் போலீசார் கைது செய்தனர். சிறுவர் இருவர் மீதான வழக்கு தொடுபுழா சிறார் கோர்ட்டிலும், மற்ற நான்கு பேரின் வழக்கு தேவிகுளம் போக்சோ விரைவு கோர்ட்டிலும் நடந்தது. தேவிகுளம் போக்சோ விரைவு கோர்ட் நீதிபதி சீராஜூதீன் விசாரணை நடத்தினார். இதில் அரவிந்த் விடுதலை செய்யப்பட்டார். சாமுவேல், சிவக்குமார், சுகந்த் ஆகியோரை குற்றவாளிகள் என அறிவித்து மூவருக்கும் தலா 90 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் தலா 40 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து உத்தரவிட்டார்.