உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / விவசாய கடனுக்கு சலுகைகள்... ஏராளம் இருக்கு வங்கிகளில்...

விவசாய கடனுக்கு சலுகைகள்... ஏராளம் இருக்கு வங்கிகளில்...

தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் விவசாயிகளுக்குத் தான் முதன் முதலாக நகைக்கடன் கொண்டு வரப்பட்டது. இப்போது அந்த திட்டத்தில் பொது மக்களும் பலன் பெற்று வருகிறார்கள். நகை கடன் பெற்ற பின்னர் ஒரு ஆண்டுக்குள் வட்டியை மட்டும் செலுத்தி அந்த கடனை அடுத்த ஓரு ஆண்டுக்கு மீண்டும் புதுப்பித்துக் கொள்ளலாம். அசல் தொகையை செலுத்த வேண்டியதில்லை. ஆனால் தற்போது நகைக் கடன் தொடர்பாக ரிசர்வ் வங்கி புதிய உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. அதன்படி ஒரு ஆண்டு கழித்து முழு கடனையும் அதாவது அசல் மற்றும் வட்டியை செலுத்தி நகையை திருப்பிக் கொள்ள வேண்டும். இது பொதுமக்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தவிர தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் விவசாயிகளுக்கான கடன் திட்டங்கள் குறித்தும் இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.

மார் 02, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி