கிராம மக்கள் முற்றுகை; விழாக்குழு திணறல் | Govt programme does not invite | dmk, admk | palladam
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அடுத்த கரைப்புதூர் ஊராட்சி அக்கணம்பாளையம் மற்றும் கணபதிபாளையம் ஊராட்சி பகுதிகளில் சமுதாய நலக்கூடம், பல்நோக்கு மையம் திறப்பு விழா மற்றும் பூமி பூஜை நிகழ்ச்சி நடைபெற்றது. அமைச்சர் சாமிநாதன் தலைமையில் நடந்த இந்த நிகழ்ச்சிக்கு ஊராட்சி தலைவர்கள் மற்றும் உள்ளூர் நிர்வாகிகளுக்கு அழைப்பில்லை. அங்கு வந்த விழா ஏற்பட்டாளர்கள் மற்றும் அரசு அதிகாரிகளிடம் திமுக, அதிமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கேள்வி கேட்டனர். பதிலளிக்க முடியாமல் அதிகாரிகள் திக்குமுக்காடினர். இதுகுறித்து கிராம மக்கள் கூறுகையில், கரைப்புதூர் ஊராட்சியில் நடக்கும் நிகழ்ச்சிக்கு ஊராட்சி தலைவர் மற்றும் வார்டு உறுப்பினர்களை அழைக்கவில்லை. அதேபோல் ஊராட்சித் தலைவர் ஆளும்கட்சியாக இருந்தும் அவருக்கு அழைப்பு விடுக்கவில்லை. உள்ளூர் நிர்வாகிகள் யாருக்கும் தகவல் கூட தெரிவிக்கவில்லை மக்கள் குமுறினர். இதுகுறித்து கணபதிபாளையத்தில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்றவர்கள் அமைச்சரிடம் கேள்வி எழுப்பினர். அவர் பிடிஓவிடம் கேட்டுக்கும்படி கூறிவிட்டு புறப்பட்டார். கிராம மக்களை போலீசார் சமாதானம் செய்தனர். அமைச்சர் பங்கேற்ற நிகழ்ச்சியில் திமுக. அதிமுக. என இருதரப்பினரையும் அழைக்காததால் பரபரப்பு ஏற்பட்டது.