உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / சுற்றுச்சுவர் இல்லை; விஷ ஜந்துக்கள் தொல்லை... பிரிக்கணும் எல்லை...

சுற்றுச்சுவர் இல்லை; விஷ ஜந்துக்கள் தொல்லை... பிரிக்கணும் எல்லை...

கோவையை அடுத்த மதுக்கரை அருகே குமிட்டி பதியில் அரசு உயர்நிலைப்பள்ளி உள்ளது. சுமார் 2 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இந்த பள்ளியில் சுற்று சுவர் இல்லை. இந்த பள்ளியையொட்டி உள்ள சாலையில் அடிக்கடி கனரக வாகனங்கள் செல்கிறது. இதனால் மாணவர்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழல் நிலவுகிறது. இது தவிர பாம்புகளும் பள்ளி வகுப்பறைகளுக்கு படையெடுக்கின்றன. இங்கு இரவு நேரங்களில் சிலர் மது அருந்துதல், போதை பொருட்கள் பயன்படுத்துதல் போன்றவற்றிலும் ஈடுபடுகிறார்கள். பாதுகாப்பில்லாத பள்ளியின் அவல நிலை குறித்து இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.

செப் 12, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ