உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / கிராமசபையில் பாராட்டு பெற்ற கோவை அரசுப்பள்ளி!

கிராமசபையில் பாராட்டு பெற்ற கோவை அரசுப்பள்ளி!

சர்க்கார் சாமகுளம் ஒன்றியம் கள்ளிப்பாளையம் ஊராட்சிக்குட்பட்ட பெத்தநாயக்கன்பாளையதில் உள்ள துவக்கப்பள்ளி 1964ஆம் ஆண்டு தொடங்கி 60 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது .இந்த பள்ளியில் வகுப்பறையின் உட்புறம், வெளிப்புறம், சுற்றுச்சுவர் ஓவியங்கள் என மாணவர்களையும் பெற்றோர்களையும் கவரும் வகையில் உள்ளது . பள்ளியில் கம்ப்யூட்டர் , ஸ்மார்ட் வகுப்பறை,புதிய கல்விமுறை ,கியூ. ஆர். கோடு கல்வி சார்ந்த வீடியோக்கள் போன்றவற்றால் கல்வி கற்பிக்கப்படுகிறது. அது மட்டுமில்லாமல் குடிநீர் வசதி, சுகாதாரமான கழிப்பறை, காலை சிற்றுண்டி ,மதிய உணவு திட்டம் செயல்படுத்தப்படுகிறது. ஆங்கில பேச்சு, யோகா, நடனம், இசை, ஓவியம், என தனி வகுப்புகள் நடத்தப்படுகிறது. இத்தனை சிறப்பு வாய்ந்த பள்ளிக்கு கள்ளிப்பாளையம் ஊராட்சி கிராம சபை கூட்டத்தில் பாராட்டு தெரிவிக்கப்பட்டது. பெற்றோர்கள், ஆசிரியர்கள், பொதுமக்கள், மற்றும் முன்னாள் மாணவர்களின் ஒத்துழைப்புடன் சிறப்பாக இயங்கும் பெத்தநாயக்கன்பாளையம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியின் சிறப்பு அம்சங்கள் குறித்து இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.

மார் 22, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி