இனித்த திராட்சை விவசாயம் இப்போது புளிப்பது ஏன்?
கோவை மாவட்டத்தில் கடந்த 1982-ம் ஆண்டு திராட்சை விவசாயம் தொடங்கியது. இது படிப்படியாக உயர்ந்து 1990 களில் திராட்சை சாகுபடி செய்யும் பரப்பளவு மூன்று ஆயிரம் ஏக்கராக அதிகரித்தது. அதன் பின்னர் திராட்சை விவசாயம் உச்சத்தில் இருந்தது. விவசாயிகளுக்கு வருமானமும் அதிகரித்தது. ஆனால் 2003-2004 ம் ஆண்டுகளில் ஏற்பட்ட கடுமையான வறட்சி காரணமாக திராட்சை சாகுபடி குறையத் தொடங்கியது. ஆயிரக்கணக்கான ஏக்கரில் பயிரிடப்பட்டு வந்த திராட்சை இன்று நுாறு ஏக்கரில் தான் பயிரிடப்படுகிறது. திராட்சை விவசாயம் வீழ்ச்சிக்கான காரணங்கள் குறித்து இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.
அக் 01, 2024