மரம், நீர்நிலைகளை காக்க... கோவைக்கு திட்டங்கள் தேவை...
பல ஆண்டுகளுக்கு முன்பு கோவையை சுற்றியுள்ள பகுதிகள் பசுமை மாறாமல் காணப்பட்டன. வெப்பத்தை உணராத அளவுக்கு சூழல் நிலவியது. நகரிலும், புறநகர் பகுதிகளிலும் சாலை விரிவாக்கம் செய்யும் போது மரங்கள் தான் அதிகம் வெட்டப்பட்டன. அவற்றில் சில மரங்கள் தான் வேறு இடத்தில் மறு நடவு செய்யப்பட்டன. விரிவாக்கம் செய்யப்பட்ட சாலைகளின் ஓரம் மரங்கள் நடுவதற்கு இடங்களே இல்லை என்றே சொல்லலாம். அடுத்து நன்னீர். எதிர்காலத்தில் இந்த நன்னீர் கிடைக்குமா என்பது உறுதியாகாமல் உள்ளது. எனவே கோவையை சுற்றியுள்ள மரங்கள் மற்றும் நன்னீர் ஆகியவற்றை பாதுகாப்பது குறித்து விரைவில் தேர்ந்தெடுக்கப்படும் எம்.பி., வேட்பாளர்கள் கவனத்தில் கொள்ள வேண்டும் என்பது குறித்து இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.
ஏப் 04, 2024