உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / விறுவிறுப்பான ஆட்டம் | Handboll competition | Tripur

விறுவிறுப்பான ஆட்டம் | Handboll competition | Tripur

திருப்பூர் மாவட்ட அளவிலான வாலிபால் போட்டி நஞ்சப்பா பள்ளியில் நடைபெற்றது. அதில் பைரேட்ஸ் கிளப் மற்றும் ராக்கர் கிளப் அணிகள் மோதியது. இதில் பைரேட்ஸ் கிளப் அணி 2:0 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றது. அடுத்த போட்டியில் உடுமலை வாலிபால் கிளப் அணியும், பிரின் செல்வா கிளப் அணியும் மோதியது. அதில் உடுமலை வாலிபால் கிளப் அணி 2:1 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றது. திருப்பூர் நஞ்சப்பா பள்ளியில் நடந்த முதல்வர் கோப்பைக்கான கூடைப்பந்து போட்டியில் எஸ் என் எஸ் பள்ளி அணியும் நஞ்சப்பா அரசு பள்ளி அணியும் மோதியது. இதில் எஸ் என் எஸ் பள்ளி அணி 26: 16 என்ற புள்ளி கணக்கில் வெற்றி பெற்றது. கால்பந்து போட்டியில் பல்லடம் இன்பேன்ட் ஜீசஸ் பள்ளி மற்றும் திருப்பூர் செயின்ட் ஜோசப் பள்ளி அணிகள் மோதியது. ஆட்ட நேர முடிவில் இரு அணிகளும் தலா ஒரு கோல் அடித்தன. அதனால் ஒவ்வொரு அணிக்கும் தலா 6 வாய்ப்புகள் வழங்கப்பட்டன. அதில் செயின்ட் ஜோசப் பள்ளி அணி அனைத்து வாய்ப்புகளிலும் கோல் அடித்து 7:6 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. முதல்வர் கோப்பைக்கான ஒவ்வொரு விளையாட்டிலும் சிறந்த வீரர்கள் தேர்தெடுக்கப்பட்டு மாவட்டம் சார்பில் விளையாட மாநில போட்டிக்கு அனுப்பி வைக்கப்படுவர்.

செப் 17, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி