சீர்வரிசையில் இது புது வரிசை!
சீர்வரிசை என்பது நமது தமிழ் கலா்சாரத்தில் பாரம்பரியமாக உள்ளது. இது கிராமப்புறங்களில் கடமை என்பதைத் தாண்டி உரிமை, பெருமை என கட்டாயமாகி விட்டது. பெண்களுக்கு காதணி விழா தொடங்கி, பூப்பு நன்னீராட்டல் , நிச்சயதார்த்தம், திருமணம், வளைகாப்பு என நிகழ்வுகளுக்கு ஏற்றபடி ஊதுபத்தி ஸ்டாண்ட், குத்துவிளக்கு எனத் தொடங்கி பாத்திரங்கள், கட்டில், மெத்தை வரை நிகழ்வுகளுக்கு ஏற்ப சீர்வரிசைகள் வழங்கப்படுகிறது. ஆனால், சீர் வரிசைகளில் தற்போது நிகழ்வுகளை தத்ரூபமாக காட்டும் அழகான பொம்மைகள் இடம்பெற தொடங்கியுள்ளது. குறிப்பாக காதணி விழாவிற்கு தாய்மாமன் மடியில் குழந்தை காது குத்துவதற்கு தயாராக அமர்ந்திருப்பது, திருமணத்தில் பெண், மாப்பிள்ளை மணவறையில் பாரம்பரியமாக அமர்ந்திருப்பது, தாய்மாமன் சீர்வரிசை அளிப்பது, மணமக்களை மேளதாளங்கள் முழங்க வரவேற்பது என பலவகையான நிகழ்வுக்கு ஏற்றபடி பொம்மைகள் கோவையில் தயாரிக்கப்பட்டு வருகிறது. இந்த பொம்மைகளை, சீர்வரிசை செய்வோர் ஆர்வமுடன் வாங்கிச் சென்று தாங்கள் நடத்தும் இனிய நிகழ்வுகளில் வைத்து சீர்வரிசையாக கொடுத்து காட்சிப்படுத்துகின்றனர். கோவையை சேர்ந்த தங்கச் செல்வன் என்பவர் இந்த பாரம்பரிய கைவினை பொம்மை பொருட்களை தயார் செய்து விற்பனை செய்வதோடு மட்டுமல்லாமல் பெண்கள் மற்றும் வேலையில்லாதவர்களுக்கு பயிற்சியும் கொடுப்பது குறித்து இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.