தேசிய மாற்றுத்திறனாளிகள் தினம் இன்று | Handicapped sisters achieving success in self employment
தேசிய மாற்றுத்திறனாளிகள் தினம் இன்று | Handicapped sisters achieving success in self employment | Pandalur நீலகிரி மாவட்டம் பந்தலூர் அருகே பாட்டவயல் கரும்பன் மூலா கிராமத்தை சேர்ந்த ஷைனுதீன் - சீனத் தம்பதி. இவர்களின் மகள்கள் ப்ளஸ் 2 படித்துள்ள 21 வயது பாத்திமத்து சுகைலா மற்றும் ப்ளஸ் 1 படிக்கும் 17 வயது ஷப்னா ஜாஸ்மின்- இருவருக்கும் எலும்பு சிதைவு நோய் உள்ளதால், எழுந்து நடக்கவும், நீண்ட நேரம் உட்காரவும் இவர்களால் முடியாது. படுத்த படுக்கையிலேயே இருக்க வேண்டிய கட்டாயம் உள்ளது. ஆனாலும் விடாமுயற்சி, தன்னம்பிக்கை காரணமாக தங்களால் முடியும் என்ற கருதி அரசு பொது தேர்வுகளை எழுதி இருவரும் தேர்ச்சி பெற்றனர். தற்போது இவர்கள் சுயதொழில் செய்வதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். இதில் சுகைலா, வண்ண காகிதங்களில் பூக்கள் செய்வது மற்றும் ஆரி தையல் வேலை செய்வது என, யூடியூப் பார்த்து கற்றுக்கொண்டு தனது திறமையை வெளிக்காட்டி வருகிறார்.