உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / மாணவ, மாணவிகள் விறுவிறுப்பான ஆட்டம் | Coimbatore | Hockey match

மாணவ, மாணவிகள் விறுவிறுப்பான ஆட்டம் | Coimbatore | Hockey match

பள்ளி மாணவர்களுக்கான ஹாக்கி போட்டி சரவணம்பட்டி குமரகுரு இன்ஜினியரிங் கல்லுாரியில் நடைபெற்றது. 13 அணிகள் பங்கேற்றுள்ளன. மாணவர்களுக்கான போட்டியில் சரஸ்வதி ராமச்சந்திரன் வித்யாலயா பள்ளி 1-0 என்ற கோல் கணக்கில் பழநி கவுண்டர் மேல்நிலை பள்ளி அணியை வென்றது. டாக்டர் பி.ஜி.வி பள்ளி அணி 6-0 என்ற கோல் கணக்கில் கிக்கானி பள்ளி அணியையும், வித்யா விகாஷ் பள்ளி அணி 4-1 என்ற கோல் கணக்கில் இந்துஸ்தான் பள்ளி அணியையும் வென்றது. மாணவியருக்கான போட்டியில் ஸ்ரீ விஸ்வேராயா வித்யாலயா பள்ளி அணி 2-0 என்ற கோல் கணக்கில் கிக்கானி பள்ளி அணியையும், சி.எஸ்.ஐ நடுநிலை பள்ளி அணி 3-0 என்ற கோல் கணக்கில் வித்யா விகாஷ் மெட்ரிக் பள்ளியையும், சி.எஸ்.ஐ உயர்நிலை பள்ளி அணி 3-1 என்ற கோல் கணக்கில் ஜெயந்திரா பள்ளியையும், கிக்கானி பள்ளி 2-0 என்ற கோல் கணக்கில் எஸ்.வி.வி.எம் பள்ளி அணியையும் வென்றன.

செப் 11, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை