உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / 30 அணிகள் ஆர்வமுடன் பங்கேற்பு| state Hockey| Sports | Suguna Trophy| covai

30 அணிகள் ஆர்வமுடன் பங்கேற்பு| state Hockey| Sports | Suguna Trophy| covai

30 அணிகள் ஆர்வமுடன் பங்கேற்பு| state Hockey| Sports | Suguna Trophy| covai கோவை ஆர் எஸ் புரம் மாநகராட்சி மைதானத்தில் சுகுணா கோப்பைக்கான மாநில அளவிலான ஹாக்கி போட்டி நடக்கிறது. 19 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான இந்த போட்டி கோவை மாவட்ட ஹாக்கி அசோசியேஷன் சார்பில் நடத்தப்படுகிறது. கோவை மாவட்ட ஹாக்கி அசோசியேஷன் தலைவர் லட்சுமி நாராயணசாமி போட்டிகளை துவக்கி வைத்தார். தமிழகத்தை சேர்ந்த 30-க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் இருந்து வீரர்கள் களத்தில் உள்ளனர். முதல் போட்டியில் திருச்சி மற்றும் ஈரோடு அணிகள் மோதின. இதில் மூன்றுக்கு இரண்டு என்ற கோல் கணக்கில் திருச்சி அணி வெற்றி பெற்றது இரண்டாவது போட்டியில் தென்காசி மற்றும் திண்டுக்கல் அணி மோதினர். ஐந்துக்கு பூஜ்ஜியம் என்ற செட் கணக்கில் திண்டுக்கல் அணி அபார வெற்றி பெற்றது. மூன்றாவது போட்டியில் மோதிய வேலூர் மற்றும் விருதுநகர் அணியினர், தலா ஒரு புள்ளியுடன் போட்டியை டிரா செய்தனர். நான்காவது போட்டியில் மோதிய நாகப்பட்டினம் மற்றும் சேலம் அணியினரும் தலா இரண்டு புள்ளிகளுடன் போட்டியை டிரா செய்தனர். ஐந்தாவது போட்டியில் திருவண்ணாமலை மற்றும் நீலகிரி மாவட்ட அணிகள் மோதினர். இரண்டுக்கு பூஜ்ஜியம் என்ற கோல் கணக்கில் திருவண்ணாமலை அணி வெற்றி பெற்றது. மே இரண்டாம் தேதி வரை போட்டி நடைபெறும். விறுவிறுப்பாக நடைபெறும் போட்டிகளை அனைவரும் ஆர்வமுடன் கண்டு ரசித்தனர்.

ஏப் 28, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !