உடுமலையில் பட்டப்பகலில் பைக் கொள்ளையர்கள் அட்டகாசம் | home invasion robbery | udumalpet
உடுமலையில் பட்டப்பகலில் பைக் கொள்ளையர்கள் அட்டகாசம் / home invasion robbery / udumalpet திருப்பூர் மாவட்டம் உடுமலை யு.கே.பி.நகர் அதிஷ்டா கார்டன் பகுதிக்கு பைக்கில் வந்த மர்ம நபர் இருவர் வீட்டின் கதவை உடைத்து பீரோவில் இருந்த 8 பவுன், வெள்ளி பூஜை பொருட்கள் மற்றும் 55 ஆயிரம் ரூபாயை திருடினர். கொள்ளையில் ஈடுபட்ட வீட்டின் எதிரே வசிக்கும் புவனேஸ்வரன் என்பவர் வீட்டின் காம்ப்வுன்ட் சுவர் ஏறி குதித்து உள்ளே புகுந்த மர்ம நபர் கதவை உடைத்து பீரோவில் இருந்த ஒரு லட்சம் ரூபாயை கொள்ளையடித்து தப்பினர். அங்கிருந்து புறப்படும் போது வீட்டில் இருந்த சிசிடிவி கண்காணிப்பு கேமரா ரிக்காடிங் பெட்டியையும் எடுத்து சென்றனர். பட்டப்பகலில் அடுத்தடுத்து வீடுகளில் நடந்த கொள்ளை சம்பவம் குடியிருப்புவாசிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அங்கிருந்த சிசிடிவி காமிரா காட்சிகளை வைத்து உடுமலை போலீசார் விசாரிக்கின்றனர்.