உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / தனது அலுவலகத்தில் பணியாற்றியவரிடமே லஞ்சம் கேட்ட அதிகாரி

தனது அலுவலகத்தில் பணியாற்றியவரிடமே லஞ்சம் கேட்ட அதிகாரி

தனது அலுவலகத்தில் பணியாற்றியவரிடமே லஞ்சம் கேட்ட அதிகாரி / Hosur / Stamp inspector arrested for taking bribe of Rs 30,000 ஓசூர் பஸ்தியில் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை முத்திரை ஆய்வாளர் அலுவலகத்தில் பணியாற்றுபவர் நாகராஜன். இவர் வரும் 30 ம் தேதி ஓய்வு பெறுகிறார். ஓய்வு கால பண பலன்களுக்கான பட்டியல் கேட்டு அவரது அலுவலக முத்திரை ஆய்வாளர் தமிழ்ச்செல்வனை அனுகினார். தனது அலுவலகத்தில் பணியாற்றும் பணியாளரிடமே பட்டியல் வழங்க 30 ஆயிரம் ரூபாய் லஞ்சமாக தர வேண்டும் என கேட்டார். லஞ்சம் கொடுக்க விரும்பாத நாகராஜன் லஞ்ச ஒழிப்பு இன்ஸ்பெக்டர் பிரபுவிடம் புகார் கூறினார். லஞ்ச ஒழிப்பு போலீசாரின் ஆலோசனைப்படி ரசாயனம் தடவிய 30 ஆயிரம் ரூபாயை அலுவலகத்தில் இருந்த தமிழ்செல்வனிடம் நாகராஜன் வழங்கினார். அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் தமிழ்செல்வனை கையும் களவுமாக பிடித்தனர். தமிழ்செல்வனிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஏப் 04, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ