தேவாலா வனத்துறை ஏற்பாடு | Human Animal Conflict Prevention
தமிழ்நாடு பல்லுயிர் பாதுகாப்பு மற்றும் பருவ நிலை மாற்றத்திற்கான பசுமை திட்டத்தின் கீழ் மனித - வனவிலங்கு மோதல் தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் தீத்தடுப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நீலகிரி மாவட்டம் பந்தலூர் அருகே தேவாலா வனத்துறை சார்பில் நடைபெற்றது. நாடுகாணி, தேவாலா, பந்தலூர் பகுதிகளில் நடந்த விழிப்புணர்வு நிகழ்ச்சிக்கு வனச்சரகர் சஞ்சீவி தலைமை வகித்தார். பொதுமக்கள் மத்தியில் தீ தடுப்பு நடவடிக்கை மேற்கொள்வதன் அவசியம் குறித்து பேசினார். அதைத் தொடர்ந்து தர்மபுரியை சேர்ந்த விடியல் கலைக்குழு சார்பில் தப்பாட்டம், ஒயிலாட்டம், பாடல்கள் மூலம் தீத்தடுப்பு குறித்த விழிப்புணர்வு, கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது. நிகழ்ச்சியில் வனவர்கள் சுரேஷ்குமார், பாலகிருஷ்ணன், வனக்குழுவினர் மற்றும் பொதுமக்கள் பங்கேற்றனர்.