சிவில் சர்வீஸ் தேர்வில் தமிழகம் பின்தங்குவது ஏன்?
சமீபத்தில் சிவில் சர்வீசஸ் தேர்வு முடிவுகள் வெளியாயின. இதில் தமிழ்நாட்டைச் சேர்ந்த 50-க்கும் குறைவான மாணவர்களே தேர்ச்சி பெற்றுள்ளனர். இது மிகவும் வருந்தத்தக்க விஷயம் ஆகும். இதற்கு முக்கிய காரணம் தமிழகத்தில் உள்ள மாணவ, மாணவிகள் புரபஷனல் பணிக்குத் தான் செல்ல வேண்டும் என்று ஆசைப்படுகிறார்கள். இந்தியாவில் தமிழகம் முன்னனேறிய மாநிலம். இங்கு ஐ.டி. துறை மிகவும் வளர்ந்துள்ளது. இதனால் அனைவரும் பி.இ., படித்து விட்டு சாப்ட்வேர் துறையில் பணியில் சேர்ந்து விடுகிறார்கள். இதே போல மருத்துவத் துறை படிப்பையும் அதிக மாணவர்கள் விரும்புகிறார்கள். இதனால் சிவில் சர்வீசஸ் தேர்வு எழுதுபவர்கள் குறைந்துள்ளதாக கூறப்படுகிறது. சிவில் சர்வீசஸ் தேர்வில் தமிழக மாணவர்களின் பங்களிப்பு குறைவதற்கான காரணங்கள் குறித்து இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.