ஒலிம்பிக்கில் ஜெயிக்க... தேவை ஐஸ் ஸ்கேட்டிங் மைதானம்
ஸ்கேட்டிங் போட்டியில் ரோலர் மற்றும் ஐஸ் ஸ்கேட்டிங் என்ற இருவகை விளையாட்டுகள் உள்ளன. கோவையை சேர்ந்த சில மாணவர்கள் ஐஸ் ஸ்கேட்டிங் போட்டியில் ஆசிய அளவில் நடந்த போட்டியில் பங்கு கொண்டுள்ளனர். இந்த விளையாட்டு ஒலிம்பிக் போட்டியாகும். வடஇந்தியாவில் ஐஸ் ஸ்கேட்டிங் வீரர்கள் பயிற்சி பெறுவதற்கு மைதானங்கள் உள்ளன. ஆனால் தென்இந்தியாவில் குறிப்பாக தமிழகத்தில் அத்தகைய வசதிகள் இல்லை. எனவே தமிழகத்தில் சென்னை அல்லது கோவையில் ஐஸ் ஸ்கேட்டிங் மைதானங்கள் அமைத்து கொடுத்தால் தமிழக குழந்தைகளும் பதக்கம் பெறுவார்கள் என்பது உறுதி. இதற்கு அரசு உதவ வேண்டும் என்பதை இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.
செப் 25, 2025