ஒரு கருவறை இரண்டு பிள்ளையார் இச்சிப்பட்டி பொக்கிஷம்...
திருப்பூர் மாவட்டம் காரணம்பேட்டை அடுத்து, இச்சிப்பட்டி கிராமம் அமைந்துள்ளது. இங்கு ஏறத்தாழ 300 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட கோவில் உள்ளது. இந்தக் கோவிலில் கருவறைக்குள் இரண்டு விநாயகர் சிலை உள்ளது.அந்த கோயில் சுற்றுச்சுவர் இடிந்து, புதர் மண்டி, கோபுரத்தின் சிற்பங்கள் சிதிலமடைந்து காணப்பட்டது. இந்தக் கோவில் இந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டின் கீழ் வருகிறது. கோவிலின் உள்ளே சென்று யாரும் வழிபடுவதில்லை. இந்த கோவிலை புனரமைத்து மீண்டும் வழிபாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என்று அந்த பகுதி மக்கள் வலியுறுத்துவது குறித்து இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.
நவ 17, 2024