மே 3ம் தேதி இறுதிப்போட்டி | International chess| Fide rating| sports
மே 3ம் தேதி இறுதிப்போட்டி | International chess| Fide rating| sports திருப்பூர் ஹார்லி குமாரசாமி மண்டபத்தில் ஐந்தாவது K.P.K இன்டர்நேஷனல் Fide ரேட்டிங் ஓப்பன் செஸ் போட்டி இன்று துவங்கியது ஏ.பி.கே அகாடமி சார்பில் போட்டி நடத்தப்படுகிறது. அகாடமி தலைவர் செல்வராஜ் போட்டிகளை துவக்கி வைத்தார். தமிழகத்தைச் சேர்ந்த பல்வேறு மாவட்டங்களில் இருந்து நூற்றுக்கணக்கான வீரர் வீராங்கனைகள் ஆர்வமுடன் களத்தில் உள்ளனர். மொத்தம் ஒன்பது சுற்றுக்களாக போட்டி நடந்தப்படும் 9 வயதுக்கு உட்பட்டோர் பிரிவில் தொடங்கி மொத்தம் 80 பிரிவுகளின் கீழ் போட்டி நடக்கிறது மே மூன்றாம் தேதி இறுதி போட்டி நடைபெறும். ஒவ்வொரு பிரிவின் கீழ் இறுதி போட்டியில் வெற்றி பெறும் வீரர்களுக்கு வெற்றிக்கோப்பை வழங்கப்படும் பங்கேற்ற அனைவருக்கும் மெடல் வழங்கப்படும் விறுவிறுப்பாக நடைபெறும் போட்டிகளை அனைவரும் ஆர்வமுடன் கண்டு ரசித்தனர்