ஆகஸ்ட் 16ம் தேதி கோலாகல துவக்கம்| Isha Gramostav sports tournament| Covai
ஆகஸ்ட் 16ம் தேதி கோலாகல துவக்கம்/ Isha Gramostav sports tournament/ Covai 17வது ஈஷா கிராமோத்சவம் விளையாட்டுப் போட்டிகள் ஆகஸ்ட் 16ம் தேதி துவங்குகிறது. கோவை, நீலகிரி மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் உள்ள கிராமப்புற பகுதிகளில் போட்டி நடைபெறும். இலவச முன்பதிவு செய்து பங்கேற்கலாம். போட்டியில், தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா, கேரளா, தெலுங்கானா, ஒடிசா மற்றும் புதுச்சேரியைச் சேர்ந்த 30000 கிராமங்களில் இருந்து 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்க உள்ளனர். ஆண்களுக்கான வாலிபால், பெண்களுக்கான த்ரோபால், மாற்றுத்திறனாளிகளுக்கான பாரா வாலிபால் போட்டிகள் மூன்று நிலையில் நடைபெறுகிறது. முதல் நிலை கிளஸ்டர் அளவிலான போட்டி ஆகஸ்ட் 16 மற்றும் 17ம் தேதி நடைபெறும். மண்டல அளவிலான போட்டிகள் செப்டம்பர் 7ம் தேதி நடைபெறும். தொடர்ந்து ஆறு மாநில அணிகளுக்கு இடையேயான இறுதிப் போட்டி செப்டம்பர் 21ஆம் தேதி ஈஷா ஆதியோகி வளாகத்தில் நடைபெறும். பரிசுத்தொகை விவரங்கள்: இறுதிப் போட்டி முதல் பரிசு - 5 லட்சம் இரண்டாம் பரிசு - 3 லட்சம் மூன்றாம் பரிசு - 1 லட்சம் நான்காம் பரிசு - 50 ஆயிரம் மண்டல அளவிலான போட்டிகள் : முதல் பரிசு - ₹12000 இரண்டாம் பரிசு - ₹8000 மூன்றாம் பரிசு - ₹6000 நான்காம் பரிசு - ₹4000 முதல் நிலை கிளஸ்டர் போட்டி முதல் பரிசு - ₹10000 இரண்டாம் பரிசு - ₹7000 மூன்றாம் பரிசு - ₹5000 நான்காம் பரிசு - ₹3000 மொத்த பரிசு தொகை - ₹67 லட்சம் கிராமோத்சவ விளையாட்டு போட்டியில், தவில், நாதஸ்வரம், வள்ளி கும்மி, ஒயிலாட்டம், செண்டை மேளம், தெலுங்கானா பழங்குடி மக்கள் குஷாடி நடனம், கர்நாடகா புலிவேஷம், உள்ளிட்ட பாரம்பரிய கலை நிகழ்ச்சிகளும் பொதுமக்களுக்கான சிலம்பம் மற்றும் கோலப் போட்டிகளும் நடைபெறும்.