கருவுறாமைக்கு மனஅழுத்தமும் ஒரு காரணமுங்க! World IVF Day
இந்தியாவில் உலக கருவியல் தினம் ஆண்டுதோறும் கடைபிடிக்கப்படுகிறது. இந்த தினத்தை நாம் ஏன் கடைபிடிக்கிறோம் என்றால் கருவுறாமை பற்றிய விழிப்புணர்வு ஏற்பட வேண்டும் என்பதற்காகத் தான். கருவுறாமைக்கு முக்கிய காரணமாக மன அழுத்தம் கூறப்படுகிறது. இந்த மனஅழுத்தம் பணியின்போது ஏற்படக்கூடியது. கருவுறாமை என்பது இப்போது ஆண்களுக்கும், பெண்களுக்கும் சரிசமமாக ஏற்படுகிறது. இதற்கு வாழ்வியல் முறையும் மற்றொரு காரணமாக கூறப்படுகிறது. பெண்கள் மற்றும் ஆண்களுக்கு கருவுறாமை ஏற்படுவதற்கான காரணங்கள் என்ன? அதன் அறிகுறிகள் என்ன? அவற்றை தடுப்பதற்கான வழிமுறைகள் என்ன? என்பது குறித்து இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.
ஜூலை 25, 2024