உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / 20க்கும் மேற்பட்ட அணிகள் பங்கேற்பு

20க்கும் மேற்பட்ட அணிகள் பங்கேற்பு

பாரதியார் பல்கலைக்குட்பட்ட கல்லூரிகளுக்கு இடையேயான கபடி போட்டி நடந்து வருகிறது. பி பிரிவு போட்டி திருப்பூர் நிப்டீ கல்லூரியில் நடந்து வருகிறது. இரு தினங்களாக நடந்து வரும் இந்த போட்டியில் 20க்கும் மேற்பட்ட அணிகள் பங்கேற்றன. முதல் போட்டியில் கதிர் கல்லூரியும் பார்க்ஸ் கல்லூரியும் மோதியது. முதல் சுற்றில் கதிர் கல்லூரி 15 புள்ளிகளும் பார்க்ஸ் கல்லூரி 11 புள்ளிகளும் பெற்றன. இரண்டாவது சுற்று சிறப்பாக விளையாடிய கதிர் கல்லூரி 19 புள்ளிகளை பெற்றது . இறுதியில் கதிர் கல்லூரி 34 க்கு 22 என்ற புள்ளிகள் பெற்று வெற்றி பெற்றது. இரண்டாவது போட்டியில் பிஷப் அம்புரோஸ் கல்லூரியில் பிஎஸ்ஏ கல்லூரி அணியும் விளையாடின. இதில் டி எஸ் ஏ கல்லூரி அணி 30 க்கு 19 என்ற புள்ளி கணக்கில் வெற்றி பெற்றது. தொடர்ந்து போட்டிகள் நடந்து வருகின்றது. போட்டி ஏற்பாடுகளை நிப் டீ கல்லூரி ஆசிரியர்கள் செய்திருந்தனர்

செப் 24, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை