உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / வீரர், வீராங்கனைகள் அசத்தல் ஆட்டம் | Kabadi competition | Kovai

வீரர், வீராங்கனைகள் அசத்தல் ஆட்டம் | Kabadi competition | Kovai

கோவை கற்பகம் பல்கலையில் கல்லுாரி மாணவர்களுக்கான தமிழக முதல்வர் கோப்பை ஹேண்ட் பால், வாலிபால், கபடி போட்டிகள் நடக்கிறது. இதில் கபடி போட்டியில் வீரர்கள் பிரிவில் 86 அணிகள் மற்றும் வீராங்கனைகள் பிரிவில் 25 அணிகள் பங்கேற்றன. வாலிபால் போட்டியில் வீரர்கள் பிரிவில் 90 அணிகள், வீராங்கனைகள் பிரிவில் 30 அணிகள், ஹேண்ட் பால் போட்டியில் வீரர்கள் பிரிவில் 28 அணிகள் மற்றும் வீராங்கனைகள் பிரிவில் 7 அணிகள் பங்கேற்றன. கபடி போட்டியில் கற்பகம் பல்கலை அணி 33-21 என்ற புள்ளிக் கணக்கில் தமிழ்நாடு வேளாண் பல்கலை அணியை வென்றது. ஸ்ரீ கிருஷ்ணா கல்லுாரி அணி 26-13 என்ற புள்ளிக் கணக்கில் கே.கே.எஸ். கல்லுாரி அணியையும், பாரதியார் பல்கலை அணி 29-17 என்ற புள்ளிக் கணக்கில் ஆர்.வி.எஸ். கல்லுாரியையும், சி.எம்.எஸ்., கல்லுாரி அணி 23-22 என்ற புள்ளி கணக்கில் ஸ்ரீ சக்தி கல்லுாரி அணியையும் வென்றது. வாலிபால் போட்டியில் கற்பகம் பல்கலை அணி 2-1 என்ற செட் கணக்கில் எஸ்.என்.எம்.வி. கல்லுாரி அணியையும், கே.பி.ஆர்., கல்லுாரி அணி 2-0 என்ற செட் கணக்கில் ஆர்.வி.எஸ். கல்லுாரி அணியையும் வென்றது.

செப் 17, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை