தினமலர் நடத்திய கண்ணையும், மனதையும் காத்த கருத்தரங்கு
சமீப காலமாக குழந்தைகள் மற்றும் பள்ளி, கல்லுாரி செல்லும் மாணவர்கள் மொபைல் போன் அதிகம் பயன்படுத்துவதாகவும் இதனால் உடல் நலம் பாதிக்கப்படுவதாகவும் பெற்றோர்கள் பலர் மருத்துவர்களிடம் புகார் தெரிவித்து வந்தனர். அத்தகைய பெற்றோருக்கு உதவும் நோக்கத்துடன் தினமலர் நாளிதழ், ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையுடன் இணைந்து, காக்க... காக்க... கண், மனநலம் காக்க என்ற விழிப்புணர்வு கருத்தரங்கத்தை கோவை நவ இந்தியா எஸ்.என்.ஆர்., ஆடிட்டோரியத்தில் நடத்தியது. காலை 10:30 முதல் 12:30 மணி வரை நடந்த இந்த கருத்தரங்கில் பெற்றோர் குழந்தைகளுடன் கலந்து கொண்டனர். இதில் மருத்துவர்கள், மன நல ஆலோசகர்கள் கலந்து கொண்டு கண்ணையும், மனதையும் காக்கும் கருத்துக்களை வழங்கினார்கள். அது பற்றி இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.
செப் 29, 2024