உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / கூட்டம் கூட்டமாக பக்தர்கள் கண்டு களிப்பு | Kalki Ganesha set | Thenkanikottai

கூட்டம் கூட்டமாக பக்தர்கள் கண்டு களிப்பு | Kalki Ganesha set | Thenkanikottai

கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டையில் ஆண்டுதோறும் திரைப்படங்களை மையமாக கொண்டு செட் அமைத்து பிரம்மாண்டமான முறையில் விநாயகர் சதுர்த்தியை பலரும் வியக்கும் வகையில் அப்பகுதி இளைஞர்கள் கொண்டாடி வருகின்றனர். இதுவரை பாகுபலி, அத்திவரதர், கேஜிஎஃப், காந்தாரா உள்ளிட்ட விநாயகர்களை அமைத்திருந்த நிலையில் தற்போது விநாயகர் சதுர்த்தி முன்னிட்டு பிரபாஸ், கமல், அமிதாப் பச்சன் ஆகியோர் நடித்த கல்கி 2898 AD திரைப்படத்தை மையமாக கொண்டு பிரம்மாண்ட செட் அமைத்து விநாயகர் சிலை அமைக்கப்பட்டுள்ளது. கல்கி திரைப்படத்தில் நுழைவது போன்று பிரம்மாண்ட தூண் நுழைவும், அங்கு பிரபாஸ் சினிமாவில் பயன்படுத்திய ராட்சத வாகனத்தை போல நிஜ சிறிய அளவிலான வாகனத்தை பார்வைக்கு வைத்துள்ளனர். செட்டுக்குள் கமல் கதாபாத்திரமான சுப்ரிம் யஷ்கின் போன்று 6 கைகளுடன் சுழலும் சிலையும், வலதுபுறமாக சென்றால் குகைக்குள்ளாக காசிலிங்கம் மற்றும் அமிதாப் பச்சன் கதாபாத்திரமான அஸ்வதாமன் விநாயகரை தரிசிக்கும் வகையில் மிகவும் பிரம்மாண்டமாக அமைக்கப்பட்டுள்ளது. வசூலில் சாதனை படைத்து வரும் கல்கி திரைப்படத்தின் காட்சிகளை போல செட் அமைத்துள்ள புஜ்ஜி வாகனம், அஸ்வதாமன் விநாயகர் உள்ளிட்ட செட் காட்சிகளை பலரும் கூட்டம் கூட்டமாக வியப்புடனும் ஆர்வமாகவும் பார்த்து வருகின்றனர். 30 லட்சம் ரூபாய் செலவில் சினிமா கலைஞர்களை கொண்டு உருவாக்கப்பட்டுள்ள இந்த கல்கி விநயாகர் புஜ்ஜி வாகனத்தில் வரும் 14 ம் தேதி நீர் நிலையில் கரைப்பதற்காக ஊர்வலமாக கொண்டு செல்லப்பட உள்ளதாக நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.

செப் 08, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை