சுவர் கட்டுமானத்துக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் | கனவு இல்லம் | பகுதி - 4 | Basement
கட்டடம் கட்டும் போது சுவர் கட்டி விட்டு கான்கிரிட் துாண் கட்டக்கூடாது. துாண் கட்டி விட்டுத் தான் சுவர் கட்ட வேண்டும். செங்கற்களுக்கு மாற்றாக இன்று பல்வேறு பொருட்கள் வந்து விட்டன. அவற்றை முன்கூட்டியே திட்டமிட்டு கட்ட வேண்டும். சுவர் கட்டும்போது சிமென்டு மற்றும் எம் சாண்ட் கலவையின் விகிதாசாரம் முக்கியம். கலவையை நீர் விட்டு கலந்து நீண்ட நேரம் வைத்திருக்கக் கூடாது. சிமென்டை கலந்து 30 நிமிடங்களுக்குள் அதை பயன்படுத்த வேண்டும். இல்லையென்றால் அது வீணாகி விடும். கற்களுக்கு இடையில் உள்ள சிமென்டு கலவையின் தடிமன் அளவை கவனத்தில் கொள்ள வேண்டும். சுவர் கட்டும் போது லின்டலும் கண்டிப்பாக அமைக்க வேண்டும். கட்டடத்தில் சுவர் கட்டுமானத்துக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்தால் தான் எதிர்காலத்தில் எந்த பிரச்னையும் ஏற்படாது. எனவே சுவர் கட்டுமானம் எந்த அளவுக்கு முக்கியத்துவம் என்பது குறித்து இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.