உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / வேஸ்ட் பிளாஸ்டிக்கில் உருவான சிசிடிவி கண்ட்ரோல் ரூம்

வேஸ்ட் பிளாஸ்டிக்கில் உருவான சிசிடிவி கண்ட்ரோல் ரூம்

கோவையை அடுத்த கணியூர் ஊராட்சியில் சேகரமாகும் பிளாஸ்டிக் கழிவுகள் மறு சுழற்சி செய்து பயன்படுத்தப்படுகிறது.கணியூர் ஊராட்சியில் தினமும் 2 ஆயிரம் கிலோ பிளாஸ்டிக் கழிவுகள் சேருகிறது. அதைக் கொண்டு தார் சாலை அமைக்கப்பட்டது. அப்படியிருந்தும் பிளாஸ்டிக் கழிவுகள் அதிக அளவில் சேர்ந்து கொண்டேயிருந்தது. அந்த கழிவுகளை தனியார் நிறுவன உதவியுடன் கணியூர் ஊராட்சியில் தனி அறை உருவாக்கப்பட்டது. அந்த அறையில் ஊராட்சியின் பல இடங்களில் பொருத்தப்பட்ட கண்காணிப்பு கேமராக்களின் கட்டுப்பாட்டு அறையாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. இப்படி வேஸ்ட் என்று துாக்கி வீசப்படும் பிளாஸ்டிக்கிலும் உபயோகமான பொருட்கள் உருவாக்கப்படுகின்றன. வேஸ்ட் பிளாஸ்டிக் எப்படி வேஸ்ட் இல்லாமல் பயன்படுத்தப்படுகிறது என்பதை இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.

நவ 22, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை