கஞ்சாரெய்டு குறித்து முன்னரே கடத்தல் ஆசாமிகளுக்குதகவல் சொன்னபோலீஸ் |kanja case police help|Kovai
கோவை மாவட்டத்தில் கஞ்சா உட்பட போதை பொருள் தடுப்பு நடவடிக்கைகளில் போலீசார் தனி கவனம் செலுத்தி வந்தனர். தொடர்ந்து வட மாநிலங்களில் இருந்து கஞ்சா கடத்தப்படுவது குறித்து போலீசாருக்கு தகவல் கிடைத்தது. பல முறை முயற்சித்தும் கடத்தல்காரர்கள் பிடிபடவில்லை. இந்நிலையில் கஞ்சா வியாபாரிகள் கணேசன் மற்றும் முத்துக்குமார் போலீசில் சிக்கினர். விசாரணையில் கோவை ராமநாதபுரம் போலீஸ் ஸ்டேஷனில் கான்ஸ்டபிளாக இருக்கும் ரவிசேகர் மற்றும் மாயசுதாகர் ஆகியோர் கடத்தல் ஆசாமிகளுக்கு கஞ்சா ரெய்டு குறித்து ரகசிய தகவல் கொடுத்தது தெரிய வந்தது. இருவரின் செல்போனை சோதித்தபோது கஞ்சா கடத்துவோர்களுக்கு தகவல் கொடுத்தது உறுதியானது. இதையடுத்து உதவி கமிஷனர் சரவணகுமார் கான்ஸ்டபில் இருவரையும் சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார்.