உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / 2 கல்லூரி மாணவர் உட்பட ஐவர் கைது; அசாம் ஆசாமி எஸ்கேப் | kanja smuggling | 5 arrested | Kovai

2 கல்லூரி மாணவர் உட்பட ஐவர் கைது; அசாம் ஆசாமி எஸ்கேப் | kanja smuggling | 5 arrested | Kovai

கோவையில் கஞ்சா புழக்கத்தைக் கட்டுப்படுத்த போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் மேற்பார்வையில் தனிப்படைகள் அமைக்கப்பட்டன. பீளமேடு பகுதியில் கல்லூரி மாணவர்கள் கஞ்சா விற்பனையில் படு பிஸியாக இருப்பதாக தனிப்படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதைத் தொடர்ந்து பீளமேடு சித்ரா காலனி அபார்ட்மெண்டில் மாணவர்கள் தங்கி இருந்த அறையில் போலீசார் ரெய்டு நடத்தினர். அங்கு அறையை வாடகைக்கு எடுத்து தங்கியிருந்த ஈரோட்டை சேர்ந்த 19 வயது பிரனேஷ், 20 வயது சபரீஷ் மற்றும் 22 வயது கவின்குமார் ஆகியோர் அசாமில் இருந்து கஞ்சாவை தபால்துறை மூலம் தபாலில் பெற்று விற்பனை செய்தது தெரியவந்தது. இதில் பிரனேஷ் மற்றும் சபரீஷ் ஆகியோர் கோவை தனியார் கல்லுாரியில் இளங்கலை இரண்டாம் ஆண்டு மாணவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. மூவரையும் போலீசார் கைது செய்தனர். கார் பறிமுதல் செய்யப்பட்டது. அசாம் மாநிலத்தை சேர்ந்த கூட்டாளியை தேடுகின்றனர். இவர் கோவை ஐ.டி. கம்பெனிக்காக அசாமில் தங்கியிருந்து ஒர்க் ஃப்ரம் ஹோம் வேலை பார்த்து வருகிறார். இவர் தனது வீட்டில் உயர் ரக கஞ்சாவை விளைவித்து பிரனேஷ், சபரீஷ் மற்றும் கவின்குமார் ஆகியோருக்கு அசாமில் இருந்து தபால்துறை மூலம் தபாலில் அனுப்பி வந்தது விசாரணையில் தெரியவந்தது. இவ்வழக்கில் பிரனேஷ், சபரீஷ் மற்றும் கவின்குமார் மூலம் கஞ்சாவை வாங்கி விற்பனை செய்த ஈரோடு கஞ்சா வியாபரிகள் தென்னரசு மற்றும் உமாபதி ஆகியோரும் கைது செய்யப்பட்டனர். இவர்கள் ஒரு கிலோ கஞ்சாவை 30 ஆயிரம் ரூபாய் வரை விற்பனை செய்தது தெரியவந்தது. இக்கும்பல் கஞ்சா மூலம் தயாரிக்கப்படும் போதை மிட்டாய், சாக்லெட், நாக்கில் ஒட்டப்படும் கஞ்சா ஸ்டாம்ப் உள்ளிட்ட போதை பொருட்களையும் விற்பனை செய்தது தெரியவந்தது. இக்கும்பலுக்கு அசாம், மேகாலயா மற்றும் நாகாலாந்து மாநிலங்களில் இருந்து கஞ்சா சப்ளை செய்யும் மிகப்பெரிய நெட் ஒர்க் கும்பலுடன் தொடர்பு இருப்பது அம்பலமானது. இதுகுறித்து அந்தந்த மாநில போலீசாருக்கு கோவை போலீசார் தகவல் தெரிவித்து கஞ்சா கும்பலை ஒட்டுமொத்தமாக கைது செய்ய போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் நடவடிக்கை எடுத்து வருகிறார்.

நவ 04, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ