ஆறு வயது குழந்தைகள் முதல் உற்சாக பங்கேற்பு| Karate Belt ceremony| Martial Arts|Hosur
ஆறு வயது குழந்தைகள் முதல் உற்சாக பங்கேற்பு/ Karate Belt ceremony/ Martial Arts/Hosur ஓசூர் ஸ்கூல் ஆப் மார்ஷியல் ஆர்ட்ஸ் டிரஸ்ட் கராத்தே பள்ளியில், கராத்தே சாகச நிகழ்ச்சி நடைபெற்றது. மாணவர்கள் ஓடு உடைத்தல், தீயுடன் ஓடு உடைத்தல் , மார்பில் கல் வைத்து சுத்தியால் உடைத்தல் உள்ளிட்ட பல்வேறு சாகசங்களை செய்து அசத்தினர். ஆறு வயது முதல் 45 வயது வரை பயிலும் மாணவர்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டனர். ஏழு ஆண்டுகளாக கராத்தே சாகசம் செய்யும் தஷ்விந்தன், தானேஷ் மற்றும் சாத்விகா பிளாக் பெல்ட் பெற்றனர். மேலும் மாணவர்களுக்கு மஞ்சள், ஆரெஞ்ச் , நீலம், பர்ப்பில் மற்றும் சிவப்பு பெல்ட் மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை ஓசூர் ஸ்கூல் ஆப் மார்ஷியல் ஆர்ட் டிரஸ்ட் குழுவினர் செய்தனர்.