உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / சர்வதேச கராத்தே சாம்பியன்ஷிப் போட்டி | international karate championship competition | covai

சர்வதேச கராத்தே சாம்பியன்ஷிப் போட்டி | international karate championship competition | covai

சர்வதேச கராத்தே சாம்பியன்ஷிப் போட்டி / international karate championship competition / covai கோவை மாவட்ட ஸ்போர்ட்ஸ் கராத்தே சங்கம் சார்பில் சர்வதேச கராத்தே சாம்பியன்ஷிப் போட்டி நடந்தது. இதில், இந்தியா, தாய்லாந்து, ஓமன், மலேசியா, இந்தோனேஷியா ஆகிய ஐந்து நாடுகளை சேர்ந்த 520 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர். தமிழகம், கேரளா, கர்நாடகா, ஆந்திரா, புதுச்சேரி மாநிலங்களை சேர்ந்த வீரர்கள், வீராங்கனைகள் ஐந்து வயது முதல் வயது வரம்பின்றி ஆக்ரோஷமுடன் போட்டியிட்டனர். குழு கட்டா பிரிவில் ஓமன் அணி தங்கப் பதக்கம் மற்றும் இந்திய அணி வெள்ளி பதக்கம் வென்றது. சாம்பியன் ஆஃப் சாம்பியன் பட்டத்தை இந்திய அணி கைப்பற்றியது. வெற்றி பெற்றவர்களுக்கு பதக்கம் மற்றும் சான்றிதழ்களை ஸ்போர்ட்ஸ் கராத்தே சங்கத் தலைவர் கார்த்திகேயன், செயலாளர் செல்வராஜ் உள்ளிட்டோர் வழங்கினர்.

ஆக 18, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ