உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / சிறப்பு நிலை குழந்தைகளிடம் பரிதாபம் காட்ட வேண்டாம்

சிறப்பு நிலை குழந்தைகளிடம் பரிதாபம் காட்ட வேண்டாம்

ஆட்டிசம் பாதிப்பு என்பது பல்வேறு காரணங்களால் குழந்தைகளுக்கு ஏற்படுகிறது. முன்னர் 151 குழந்தைகளுக்கு ஒரு குழந்தை இது போன்ற பாதிப்புடன் காணப்பட்டது. இது தற்போது 65 குழந்தைக்கு ஒன்று என்ற அளவில் அதிகரித்து வருகிறது. இது மிகவும் கவனிக்கப்பட வேண்டிய மற்றும் தவிர்க்கப்பட வேண்டிய முக்கியமான விஷயம். இது மூளை வளர்ச்சியில் ஏற்படும் நரம்பு கோளாறை அடிப்படையாக கொண்டது. மாற்றுத் திறனாளிகளுக்கு வெளிப்படையாக அவர்கள் உடலில் உள்ள மாற்றம் அல்லது குறைபாடு போல, ஆட்டிசம் என்பது மூளை வளர்ச்சியில் உள்ள சிறு குறைபாடு. இதை குறைபாடு என்பதை விட ஒரு விதமான நிலைப்பாடு என்று தான் குறிப்பிட வேண்டும். சராசரியாக 2 வயது என்ற அளவில் தான் இது குறித்து தெரிய வரும். குறிப்பாக தகவல் தொடர்பு மற்றும் தனிப்பட்ட திறனை இது பாதிக்கும் என்று எளிமையாக கூறலாம். பெயர் சொல்லி அழைத்தால் கூட அதற்கு உரிய பதில் தராமல் போவது, கண்களை நேராக பார்க்காமல் தவிர்ப்பது போன்ற நடவடிக்கைகள் இதன் அறிகுறிகள். அதீத வெளிச்சம், அதிக சப்தம் ஆகியன தேவைப்படுவதோ அதை முற்றிலும் தவிர்ப்பது கூட இதன் ஒரு அறிகுறியாக இருக்கும். பெருமளவு குழந்தைகள் பேச துவங்கும் காலத்தில் இதை அறிய முடியும். பேசுவதில் தாமதம் ஏற்படுதல், பேச்சு வந்த குழந்தை பின்னர் தடுமாறுதல் போன்றவையும் இதற்கான ஒரு அறிகுறி. இத்தகைய சிறப்பு நிலை குழந்தைகளிடம் பரிதாபம் காட்ட வேண்டாம் என்றும், இதை குணப்படுத்துவது எப்படி என்பது பற்றி இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.

ஜன 08, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !