ஒலிம்பிக் வீராங்கனை வினேஷ் போகத்திற்கு சமர்பணம் | Sports | KG Hospital | Covai
கோவை கொண்டை சாலையில் இயங்கி வருகிறது கே ஜி மல்டி ஸ்பெஷாலிட்டி ஆஸ்பிடல். இங்கு டாக்டர், நர்ஸ் உட்பட ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பணியாற்றுகின்றனர். இவர்களுக்கான விளையாட்டு போட்டி கே. ஜி. ஹாஸ்பிடல் ஸ்போர்ட்ஸ் டே 2024 என்ற தலைப்பின் நடைபெற்றது. சிறப்பு விருந்தினர்களாக ஆஸ்பிடல் நிறுவனர் பத்மஸ்ரீ டாக்டர். ஜி. பக்தவச்சலம் மற்றும் போலீஸ் டிஎஸ்பி சரவணக்குமார் பங்கேற்றனர். இப்போட்டியில் டாக்டர், நர்ஸ், ஊழியர் மற்றும் தொழில்நுட்ப வல்லுனர்கள் ஆர்வத்துடன் பங்கேற்றனர். பல்வேறு பிரிவின் கீழ் 100 மற்றும் 200 மீட்டர் ஓட்டபந்தயம், குண்டு எறிதல் உள்ளிட்ட போட்டிகள் நடைபெற்றன. போட்டிகளில் வென்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. ஆஸ்பிடல் நிறுவனர் டாக்டர் பக்தவச்சலம் வாழ்த்துரை வழங்கினார். அவர் பேசுகையில், ஒலிம்பிக் மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் பதக்கம் வெல்வதற்கு தகுதியானவர். அவர் இனிமேலும் எதிர் காலங்களில் சிறப்பாக செயல்படுவார். பல்வேறு சாதனைகள் புரிவார். டாக்டர், நர்ஸ் மற்றும் ஊழியர்கள் பங்கேற்கும் இந்த விளையாட்டுப் போட்டி வினேஷ் போகத்திற்கு சமர்ப்பிப்பதில் பெருமிதம் கொள்கிறோம் என்றார்.