தங்கம், வெள்ளி, வெண்கலம் வென்று தமிழகத்துக்கு பெருமை சேர்த்த திருப்பூர் வீரர்கள்
தங்கம், வெள்ளி, வெண்கலம் வென்று தமிழகத்துக்கு பெருமை சேர்த்த திருப்பூர் வீரர்கள் | Coimbatore | Kickboxing competition வாக்கோ இந்தியா ஓப்பன் சர்வதேச சாம்பியன்ஷிப் கிக் பாக்சிங் 3 வது சர்வதேச போட்டி கடந்த 11 ம் தேதி டில்லியில் நடைபெற்றது. இதில் அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஜப்பான், ஜெர்மனி, தாய்லாந்த் உள்ளிட்ட 21 நாடுகளைச் சேர்ந்த 1000 க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர். தமிழகத்திலிருந்து 80 க்கும் மேற்பட்ட வீரர்கள் பங்கேற்றனர். திருப்பூர் அனிதா 65 கிலோ எடைப் பிரிவில் தங்கம் வென்றார். அக் ஷயாஸ்ரீ 70 கிலோ மற்றும் தர்ஷினி 55 கிலோ எடைப் பிரிவில் வெள்ளி வென்றனர். அகிலன் 55 கிலோ எடைப் பிரிவில் வெண்கலம் வென்றார். வெற்றி பெற்ற வீரர்கள் ரயில் மூலம் திருப்பூர் வந்தனர். அவர்களுக்கு பயிற்சியாளர்கள் மற்றும் பெற்றோர்கள் தடபுடல் வரவேற்பு அளித்தனர்.