உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / நிரந்தர தீர்வு கேட்டு பொதுமக்கள் சாலை மறியல் | Killed by Elephant | Public protest | Pandalur

நிரந்தர தீர்வு கேட்டு பொதுமக்கள் சாலை மறியல் | Killed by Elephant | Public protest | Pandalur

நீலகிரி மாவட்டம் சேரம்பாடி சப்பந்தோடு பகுதியில் 63 வயது குஞ்சு முகமது அதிகாலை வீட்டில் துாங்கிக் கொண்டிருந்தார். வீட்டு வாசலில் யானை பாக்கு மரங்களை உடைத்துக் கொண்டிருந்தது. வெளியில் வந்த அவர் சத்தம் எழுப்பி யானையை அங்கிருந்து துரத்தினார். அப்போது வீட்டின் பின் பகுதியிலிருந்து வந்த மற்றொரு யானை அவரை தாக்கியதில் உயிரிழுந்தார். வனத்துறையினர் யானை கூட்டத்தை துரத்தினர். யானை தொல்லைக்கு நிரந்தர தீர்வு காண வலியுறுத்தி இன்று காலை 6 மணிக்கு பொதுமக்கள் மற்றும் மக்கள் வாழ்வாதர அமைப்பை சேர்ந்தவர்கள் இணைந்து சேரம்பாடி சுங்கம் பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்டனர். கிராமங்களில் முகாமிடும் யானைகளை வனத்திற்குள் விரட்ட வேண்டும். யானைகளுக்கு தேவையான உணவுகளை வனத்தில் உற்பத்தி செய்ய வேண்டும். தினசரி ஊருக்குள் வரும் கட்டைகொம்பன், புல்லட் ஆகிய 2- யானைகளை கும்கி யானைகள் உதவியுடன் துரத்த வேண்டும். மாவட்ட கலெக்டர் நேரில் வந்து பேச வேண்டும் போன்ற கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது. தொடர்ந்து ஆர்.டி. ஓ. செந்தில்குமார், வன அலுவலர் வெங்கடேஷ் பிரபு, டி.எஸ்.பி. வசந்தகுமார் உள்ளிட்டோர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். முடிவில் யானைகளை துரத்த நடவடிக்கை எடுக்கப்படும். அகழி அமைக்கவும், கூடுதல் வனப்பணியாளர் மூலம் கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பு வழங்கப்படும் என உறுதியளிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து 6 மணி நேரத்திற்கு பின் மறியல் கைவிடப்பட்டது. மறியலால் தமிழக-கேரளா இடையே போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

செப் 26, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை