ஊராட்சிக்கு வருமானம் ஈட்டித்தரும் விவசாயம்
கோவை மாவட்டம் சூலுார் அருகே உள்ள கிட்டாம்பாளையத்தில் 6 ஏக்கர் பரப்பளவில் 6 ஆயிரம் மரங்கள் உள்ள வனம் வளர்க்கப்பட்டுள்ளது. இது தவிர ஊராட்சிக்கு சொந்தமான இடங்களில் விவசாயம் செய்யப்பட்டு வருகிறது. முதன்முதலாக வெங்காயம் சாகுபடி செய்து அதை ஊராட்சி மக்களுக்கு குறைந்த விலையில் விற்கப்பட்டது. இதில் மூன்று மாதத்தில் இரண்டே கால் லட்சம் ரூபாய் ஊராட்சிக்கு லாபம் கிடைத்தது. இது தவிர எலுமிச்சை உள்ளிட்ட பல்வேறு பயிர்களை சாகுபடி செய்து அதில் வரும் லாபத்தை ஊராட்சி மக்களுக்கு கிட்டாம்பாளையம் ஊராட்சி நிர்வாகம் அளித்து வருகிறது. அந்த ஊராட்சியின் புதுமையான முயற்சி குறித்து இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.
நவ 27, 2024