மேற்குத் தொடர்ச்சி மலையில் கனமழை! கோவை குற்றாலத்திற்கு தடை | Kovai Kutralam | Coimbatore
கோவையில் இருந்து 40 கி.மீ.,தொலைவில், மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய சாடிவயல் வனப்பகுதியில் கோவை குற்றால நீர்வீழ்ச்சி அமைந்துள்ளது. இங்கு நிலவும் குளுமையான சீதோஷ்ண நிலைக்காகவும், அருவியில் குளித்து மகிழவும், தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலங்களில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருவது வழக்கம். இந்நிலையில், மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் கடந்த ஜூன், 1ம் தேதி முதல் தென்மேற்கு பருவமழை பெய்ய துவங்கியது. புதன்கிழமை நிலவரப்படி சிறுவாணி நீர்ப்பிடிப்பு பகுதியில், 120 மி.மீ.,மழையும், சிறுவாணி அடிவாரப்பகுதியில், 60 மி.மீ.,மழையும், தொண்டாமுத்துார் பகுதியில், 33 மி.மீ.,மழையும் பதிவாகியுள்ளது. தொடர்ந்து கனமழை பெய்து வருவதால், கோவை குற்றால நீர்வீழ்ச்சியில் வெள்ளம் ஆர்ப்பரித்து கொட்டுவதால், சுற்றுலா பயணிகள் அங்கு செல்ல வனத்துறையினர் தடை விதித்துள்ளனர். இது குறித்து இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.