உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / இளம் வளர்ப்பு யானைகளுக்கு கும்கி பயிற்சி | Kumki training for elephants | Theppakadu elephants camp

இளம் வளர்ப்பு யானைகளுக்கு கும்கி பயிற்சி | Kumki training for elephants | Theppakadu elephants camp

நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகம் தெப்பக்காடு மற்றும் அபயாரண்யம் யானைகள் முகாமில் இரண்டு குட்டி யானைகள் உட்பட 29 வளர்ப்பு யானைகள் பராமரிக்கப்படுகிறது. இதில் ஆறு யானைகள் ஓய்வு பெற்றன. இங்குள்ள பயிற்சி பெற்ற கும்கி யானைகள் ஊருக்குள் நுழையும் காட்டு யானைகளை விரட்டுவது, அவைகளை பிடித்து முதுமலைக்கு கொண்டு வருவது, இளம் வளர்ப்பு யானைக்கு கும்கி பயிற்சி வழங்குவது போன்ற பணிகளில் ஈடுபட்டு வருகிறது. இங்குள்ள வளர்ப்பு யானைகள் கிருஷ்ணா, கிரி, பொம்மி, ரகு, ஜம்பு, மிசினி ஆகியவைகளுக்கு சில வாரமாக தினமும் காலையில் கும்கி பயிற்சி அளித்து வருகின்றனர். இதனை சுற்றுலா பயணிகள் ஆர்வத்துடன் கண்டு ரசிக்கின்றனர். வனத்துறையினர் கூறுகையில், முகாமில் சீனியர் கும்கி யானைகள் ஓய்வு பெரும்போது அதற்கு மாற்றாக, கும்கி யானைகளை தேவை உள்ளது. அதனைக் கருத்தில் கொண்டு, இளம் வளர்ப்பு யானைகளுக்கு கும்கி பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது. பருவமழை துவங்கும் வரை பயிற்சி நடைபெறும். முழுமையாக பயிற்சி பெற்ற யானைகள், சீனியர் கும்கி யானைகளுடன் இணைந்து ஊருக்குள் வரும் யானைகளை விரட்டுதல், அதனை பிடித்து லாரியில் ஏற்றி வனப்பகுதிகள் விடுதல் அல்லது முகாமுக்கு கொண்டு செல்லுதல் போன்ற பணிகளில் ஈடுபடுத்தப்படும் என்றனர்.

மே 16, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி