சிட்ரா - குரும்பபாளையம் சாலை விரிவாக்கப்படுமா? Coimbatore
கோவை பீளமேடு விமான நிலையம் அருகில் உள்ள சித்ரா சந்திப்பிலிருந்து குரும்பபாளையம் செல்லும் காளப்பட்டி சாலை மாநில நெடுஞ்சாலைத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. அந்த சாலையில் தற்போது வாகனங்கள் பெருக்கம் அதிகரித்துள்ளது. கோவையிலிருந்து ஊட்டிக்கு செல்வதற்கு அரசு முக்கிய விருந்தினர்கள் இந்த சாலையை தான் பயன்படுத்துகின்றனர். இதை நான்கு வழி சாலையாக மாற்ற தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. இதற்கான நில எடுப்பு பணிகள் இழுபறியில் உள்ளது. நான்கு வழி சாலை விரிவாக்கத்துக்காக ஒதுக்கப்பட்ட நிதியும் தற்போது போதுமானதாக இருக்காது என்றும் கூறப்படுகிறது. எனவே காளப்பட்டி சாலையை நான்கு வழி சாலையாக விரிவாக்கம் செய்வதை வலியுறுத்துவது குறித்து இந்த வீடியோ தொகுப்பில் காணலாம்.
டிச 02, 2024