நிலம், பயிற்சி, உரம் இலவசம்! இயற்கை விவசாயம் கற்றுக்கொள்ள இளைய தலைமுறைக்கு அழைப்பு
பருவ காலத்துக்கு தகுந்தாற்போன்று உணவு வகைகளை மாற்றிக் கொள்வது நல்லது. ராகி களி, சோளச் சோறு, தினை, வரகு, சாமை இவற்றுடன் கீரை வகைகளை சேர்த்து சாப்பிட்டால் நோய் பக்கத்தில் வராது. இத்தகைய உணவு பயிர்களை விளைவிப்பதற்கான இயற்கை விவசாயம் எப்படி செய்வது என்பது குறித்து பயிற்சிகள் அடுத்த தலைமுறைக்கு இலவசமாக அளிக்கப்படுகிறது. இதற்காக சிறுவர், சிறுமிகள் அந்த பண்ணைக்கு அனுப்பி வைக்கப்படுகிறார்கள். அவர்கள் எளிதில் புரிந்து கொள்ளும் வகையில் விதைப்பதில் இருந்து அறுவடை செய்வது வரை அனைத்து விவசாய முறைகளும் கற்றுத் தரப்படுகிறது. இதற்காக ஒரு சென்ட் நிலம், உரம் போன்றவை பயிற்சி முடியும் வரை இலவசமாக வழங்கப்படுகிறது. இத்தகைய புதுமையான இயற்கை விவசாயம் குறித்து இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.