உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / நீலகிரியில் நில வாழ் பறவைகள் கணக்கெடுப்பு | Land Bird Census | Cherambadi | Nilgiris

நீலகிரியில் நில வாழ் பறவைகள் கணக்கெடுப்பு | Land Bird Census | Cherambadi | Nilgiris

நீலகிரியில் நில வாழ் பறவைகள் கணக்கெடுப்பு / Land Bird Census / Cherambadi / Nilgiris தமிழகம் முழுவதும் கடந்த 9ம் தேதி வனத்துறை சார்பில் நீர் வாழ் பறவைகள் கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. அதைத் தொடர்ந்து நில வாழ் பறவைகள் குறித்த கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. கூடலூர் வனக்கோட்டத்தில் 23 இடங்களில் 77 வன பணியாளர்கள் மற்றும் 50 தன்னார்வலர்கள் இணைந்து இந்தக் கணக்கெடுப்பு பணியில் காலை 6:30 மணி முதல் ஈடுபட்டனர். சேரம்பாடி வனச்சரகத்தில் ஐந்து இடங்களில் கணக்கெடுப்பு நடத்தப்பட்டதில் இருவாச்சி பறவைகள், பிளம் தலைகிளி, தங்க முதுகு மரங்கொத்தி, ஊதா நிற சூரிய பறவை, சிறிய நீர் காகம், ஆரஞ்சு மினிவெட், சாம்பல் நிற டிராங்கோ, சிலந்தி வேட்டைக்காரன் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட பறவைகள் இருப்பது கண்டறியப்பட்டு பதிவு செய்யப்பட்டது. வனச்சரகர் அய்யனார் தன்னார்வலர்கள் மத்தியில் கூறுகையில், பறவைகள் அதிகளவில் இருந்தால் மட்டுமே அந்த இடம் செழிப்பான வனமாக காணப்படும். அதற்கு வனம் மற்றும் நீர் நல்ல நிலையில் இருக்க வேண்டும். இதன் மூலம் மனிதர்கள் வாழ தேவையான காற்று மற்றும் நீர் கிடைக்க வழி ஏற்படும். எனவே கோடை காலங்களில் வனப்பகுதிகளை தீவைத்து அழிக்கக் கூடாது. வீடுகளின் அருகே பழங்கள் தரும் மரங்களை நடவு செய்ய வேண்டும். கோடை காலங்களில் பறவைகளுக்கு வீடுகளை ஒட்டி தண்ணீர் வைத்து பறவை இனங்களை பாதுகாக்க மக்கள் முன் வர வேண்டும் என்றார்.

மார் 16, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை