குன்னுார் அலைசேட் காம்பவுண்ட் நடை பாதையில் மண் சரிவு| Landslide | Teacher death | coonoor
குன்னூர் அரசு லாலி மருத்துவமனை அருகே அலைசேட் காம்பவுண்ட் பகுதியை சேர்ந்தவர் ரவி. இவரது மனைவி ஜெயலட்சுமி, வயது 42. தனியார் பள்ளி ஆசிரியை. இவரது மகள்கள் வர்ஷா, வையூ. குன்னுாரில் நேற்றிரவு 9 மணியில் இருந்து கன மழை கொட்டி தீர்த்தது. ஜெயலட்சுமி வீட்டின் நடை பாதை பகுதியில் இரவு 10 மணிக்கு மண்சரிவு ஏற்பட்டது. சப்தம் கேட்டு கதவை திறந்து வெளியே வந்த ஜெயலட்சுமி மண்சரிவில் சிக்கி மண்ணில் புதைந்தார். மற்ற மூவர் வீட்டில் இருந்து வெளியே வர முடியாத நிலை ஏற்பட்டது. குன்னுார் தீயணைப்பு துறையினர் அப்பகுதி மக்கள், வீட்டில் சிக்கியவர்களை பத்திரமாக மீட்டனர். மண்ணில் புதைந்த ஜெயலட்சுமியின் உடல் இரவு 11 மணிக்கு சடலமாக மீட்கப்பட்டது. வருவாய்த்துறை, போலீசார் மற்றும் நகராட்சி அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். மண்ணில் புதைந்து ஆசிரியை ஜெயலட்சுமி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.