உடைமைகள் வைக்க, உட்கார்ந்து சாப்பிட வசதி ஏற்படுத்தி தரணும்...
கோவை ஆடீஸ் வீதியில் மாநகராட்சி சார்பில் அறிவு சார் மையம் அமைக்கப்பட்டுள்ளது. போட்டித் தேர்வு எழுதுபவர்களுக்கான அனைத்து வசதிகளும் இங்கு செய்யப்பட்டுள்ளன. இந்த மையத்துக்கு வரும் மாணவர்களின் எண்ணிக்கை நாள் தோறும் அதிகரித்து வருகிறது. இங்கு படிக்க வருபவர்கள் மதிய உணவு சாப்பிடுவதற்கான அறை பூட்டி வைக்கப்பட்டுள்ளது. அதை திறந்து விட்டால் மாணவர்கள் சவுகரியமாக அமர்ந்து மதிய உணவு சாப்பிட முடியும். மழை காலங்களில் அவர்கள் அவதிக்குள்ளாகும் நிலை ஏற்படும். எனவே மாணவர்கள் சாப்பிடுவதற்கு வசதியாக ெஷட் அமைத்து கொடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் குறித்து இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.
மே 18, 2025