உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / நூலகத்துக்கு பயன்படுத்து அல்லது நூலக வரியை நிறுத்து!

நூலகத்துக்கு பயன்படுத்து அல்லது நூலக வரியை நிறுத்து!

கோவை மாநகராட்சியில் வசூலிக்கப்படும் சொத்து வரியில் 7 சதவீதம் நூலக வரியாக பெறப்படுகிறது. இத்தொகை நூலகத் துறைக்கு மாநகராட்சியில் இருந்து வழங்கப்படும் நூலகங்களை மேம்படுத்துவது, தேவையான புத்தகங்கள் வாங்குவது, உட்கட்டமைப்பு வசதி செய்வது, உள்ளிட்ட பணிகள் மேற்கொள்வது வழக்கம். இவ்வகையில் 2021 முதல் 2024 வரையிலான 4 ஆண்டுகளில் 82 கோடியே 55 லட்சத்து 31 ஆயிரத்து 912 ரூபாய் நூலகம் வழியாக கோவை மக்களிடம் இருந்து வசூலிக்கப்பட்டுள்ளது. இத்தொகையில் இதுவரை 19 லட்சத்து 32 ஆயிரத்து 301 ரூபாய் மட்டும் நூலகத்துறைக்கு வழங்கப்பட்டிருக்கிறது. இன்னும் 63 கோடியே 54 லட்சம் 99 ஆயிரத்து 611 ரூபாய் செலுத்தாமல் மாநகராட்சி நிர்வாகம் நிறுத்தி வைத்திருக்கிறது. இந்த தொகையை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்பதை வலியுறுத்துவது குறித்து இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.

மார் 03, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ