தண்ணீர் குறைஞ்சிருச்சு... விரைந்து முடிக்கணும்..
சிறுமுகை அடுத்த லிங்காபுரம் அருகே, காந்தை ஆற்றின் குறுக்கே, கட்டப்பட்ட பாலம் உயரம் குறைவாக கட்டியதால் மழைக்காலங்களில் அந்த பாலம் ஆற்று நீரில் மூழ்கியது. இந்த நிலையில் லிங்காபுரம்-காந்தவயல் இடையே உள்ள பழைய பாலத்தின் அருகிலேயே ரூ.15.40 கோடி மதிப்பீட்டில் பவானி ஆற்றின் குறுக்கே புதிய மேம்பாலம் கட்டும் பணிகள், கடந்த 2023 ம் ஆண்டு துவங்கி நடைபெற்று வருகிறது. ஆனால் பணிகள் மந்தமாக நடைபெறுகிறது. புதிய பாலம் கட்டுமான பணியை விரைந்து முடித்து மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என்பதை வலியுறுத்துவது குறித்து இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.
மார் 16, 2026