ஊட்டி ரோட்டில் 5 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு | Lorry Accident | 5 hours traffic jam | cuddalor
ஊட்டி ரோட்டில் 5 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு | Lorry Accident | 5 hours traffic jam | cuddalor மைசூரிலிருந்து அரிசி ஏற்றிய லாரி இன்று காலை 6 மணிக்கு நீலகிரி கூடலுார் வழியாக ஊட்டி சென்றது. தவளைமலை கொண்டை ஊசி வளைவை கடந்து மேல் நோக்கி சென்ற லாரி கட்டுபாட்டை இழந்து கீழே உள்ள ரோட்டில் கவிழ்ந்தது. இதில் டிரைவர் காயமடைந்தார். அவரை ஊட்டி அரசு ஹாஸ்பிடலில் அட்மிட் செய்தனர். இதனால் தமிழகம், கேரளம் மற்றும் கர்நாடகா இடையே போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சாலையின் இருபுறமும் அரசு பஸ்கள், சுற்றுலா வாகனங்கள் நீண்ட வரிசையில் அணி வகுத்து நின்றன. பயணிகள் மற்றும் டிரைவர்கள் கடும் சிரமத்துக்கு ஆளாகினர். நெடுஞ்சாலைத்துறையினர் ஜெசிபி உதவியுடன் லாரியை ரோட்டோரம் நிறுத்தி போக்குவரத்தை சீர் செய்தனர். தொடர்ந்து 5 மணி நேரத்திற்கு பின் போக்குவரத்து சீரானது.