ஆறு வழிச்சாலையாகும் நீலாம்பூர் பைபாஸ் ரோடு
இந்தியாவின் முதல் பி.ஓ.டி., திட்டங்களில் ஒன்று கோவை நீலாம்பூர் பைபாஸ் சாலை. 27 கி.மீ. நீளம் கொண்ட இந்த சாலை நீலாம்பூரில் தொடங்கி மதுக்கரையில் முடிகிறது. இந்த சாலை எல் அண்டு டி பைபாஸ் சாலை என்றும் அழைக்கப்படுகிறது. முன்பு இந்த சாலையில் குறைந்த எண்ணிக்கையிலான வாகனங்கள் சென்றன. ஆனால் தற்போது தினமும் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட வாகனங்கள் கேரளா சென்று வருவதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. இந்த இரு வழிசாலையில் அடிக்கடி விபத்துக்களும் நடக்கின்றன. போக்குவரத்து நெரிசல் மிகுந்த இந்த சாலையை எல் அண்டு டி நிறுவனத்திடமிருந்து இந்திய தேசிய நெடுஞ்சாலைத்துறை ஆணையம் சமீபத்தில் எடுத்துள்ளது. இதைத் தொடர்ந்து இந்த சாலையை ஆறு வழிச்சாலையாக அகலப்படுத்தப்படுத்த வேண்டும் என்று கொடிசியா உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் மத்திய சாலை போக்குவரத்து அமைச்சருக்கு கடிதங்கள் எழுதியுள்ளன. இதற்கான அவசியம் குறித்து இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.